ஆஸ்துமா-இது பாரபட்சம் இன்றி எல்லோரையும் பாதிக்கக்கூடிய ஒரு நோய். இது ஆண், பெண், குழந்தைகள் என்ற எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் எந்த காலத்திலும், எந்த நேரத்திலும், எந்த வயதிலும் எல்லோரையும் பாதிக்கக் கூடியது. ஆனாலும் இதன் பாதிப்பு பெரும்பாலும் குளிர்காலங்களில் இதன் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே காணப்படும். உலகின் 25 பேரில் ஒருவர் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுகின்றனர்.
இப்ப நிறைய விளம்பரங்கள பார்க்குறோம். ஆண்மை குறைவா? எங்கிட்ட வாங்க 7 நாட்களில் குணம், மருந்தை சாப்பிட உடன் குணம் என்றும் , இன்னும் சில மருத்துவர்கள், அவங்க கொடுக்கவிருக்கும் மருந்துகளை, நோயாளி களை பார்க்காமலேயே, மருந்துகளில் பல பிரிவுகளை உருவாக்கி A பிரிவு, Bபிரிவு,C பிரிவு என்றும், மேலும் Special, super special. என்றும் வகைபடுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
குழந்தையின்மைக்கான காரணங்களில் முக்கிய பங்கு வகிப்பது ஆண் மலட்டுத்தன்மை மற்றும் ,பெண் மலட்டுத்தன்மை ஆகும். சராசரியான ஒரு ஆண் ஒரு பெண்ணைத் தாய்மையடையச் செய்ய அவனது உயிர் நாடியில் இருந்து வெளிப்படும் விந்துக்களின் 1 மில்லி லிட்டரை எடுத்து பரிசோதித்து பார்க்கும் போது உயிரணுக்களின் எண்ணிக்க குறைந்த பட்சம் 60 மில்லியனுக்கும் மேலான எண்ணிக்கையுடனும், அதன் அசையும் தன்மை 75% சதவீதத்திற்கும் மேலாகவும், அதன் சேப் மார்பாலஜீ ( வடிவமைப்பு ) நார்மலாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
மாதவிடாய் கோளாறுகள் 28 நாட்களைக் கொண்ட ஒரு பெண்ணின் மாதவிலக்கு சுழற்சியானது, 5 காலகட்டங்களாக விரிக்கப்படுகின்றது: 1. 1வது நாள் மாதவிடாய் ஆனது தொடங்கி 4வது நாள் வரை ஒரு பெண்ணின் மாதவிலக்கின் ரத்தப்போக்கு காலங்களாகும். 2. அடுத்த 5வது நாள் முதல் 12வது நாட்கள் வரை ப்பாலிகுலோர் ஃபேஸ் (Follicular) அதாவது கருவாணுவானது வளரும் காலமாகவும். 3. அடுத்து 13வது நாள் முதல் 14வது நாள் வரை ஓவலேஸன் அதாவது கருவாணுவானது வெளியேறும் காலமாகவும். 4. அடுத்து 15வது நாள் முதல் 26வது நாள் வரை கருவாணுவானது வெளிப்பட்ட பின் வளர்ச்சி அடையும் காலமாகவும்.
கருப்பை அதாவது யூட்ரஸ் என்பது அடிவயிற்றில் சதையில்லான ஓர் உறுப்பு. இதன் வழியாகத்தான் ஒரு ஆணின் உயிரணு கருப்பை வெளிக் குழல், கருக்குழாய் அதாவது ஃபெலோப்பியன் ட்யூப் என்கிற 12 சென்டிமீட்டர் நீளமுள்ள இரு குழல்களில் ஒன்றிற்குள் செல்கிறது கருப்பையின் மேற்புறம் உள்ள இரு குழல்களில் ஒன்றிற்குள் செல்கிறது. கருப்பையின் மேல்புறம் உள்ள இரு சினைப்பைகளில் (ஓவரீஸ்) ஒவ்வொரு கருப்பை வெளிக்குழலிலும் முடிவடைகின்றன. ஒவ்வொரு சினைப்பையும் வெண்மை நிறத்துடன், பாதாம் பருப்பு வடிவத்தில் சுமார் 3 செ.மீ, நீளத்திற்கு இரண்டும் சேர்ந்த சுமார் 7 கிராம் எடையும் காணப்படும்.
இது கர்ப்பப்பையில் ஏற்படும் ஒருவித கட்டியாகும். இது கர்ப்பப்பையின் உள்பகுதியிலோ அல்லது கர்ப்பப்பையின் வெளிப்பகுதியிலோ அல்லது இரண்டு பகுதியிலும் காணப்படும் ஃபைப்ராய்ட் (Fibroid) எனப்படும் ஒருவகை கட்டியாகும். இந்த நோய் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன், ப்ரோ கெஸ்டி ரோட்டின் மற்றும் ப்ரோ கெஸ்டின் என்ற ஹார்மோன்களின் தூண்டுதலால் கருப்பை தசையில் (எண்டோமெட்டிரியம்) உண்டாகக் கூடிய அரியவகை புற்றுநோய் அல்லாத கட்டியாகும். குழந்தையின்மைக்கு இதுவும் ஒரு காரணமாக அமையலாம்.
பிஸிஓஎஸ் எனப்படும் பாலிசிடிக் ஓவரி சிண்ரோம் என்னும் பிரச்சனை என்று 60% பெண்களை தாய்மை அடைய செய்ய தடையாக இருக்கிறது. பிஸிஓஎஸ் பாதிப்பு உள்ள பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு ஏற்பட வேண்டும் என்பதற்கு இல்லை. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களால் 30% பேருக்கு மட்டுமே மாதவிலக்கு கோளாறு ஏற்படுகிறது.
ஒரு பெண்ணானவள் தாய்மையடைவதில் முக்கிய பங்கு வகிப்பது ஃபெலோப்பியன் ஃட்யூப் எனப்படும் கருக்குழாய் ஆகும். இதில் சினைப்பையில் இரு பக்கங்களில் இருந்தும் இடது, வலது என 4 அங்குல நீளத்துடன் இரு குழாய்களாக கருப்பையை இணைக்கிறது. இவ்விரு கருக்குழாய்கள் மூலம் தான் சினைப்பையில் இருந்து வெளிப்படும் முயற்சியுற்ற கரு முட்டை ஆனது ஒரு ஆணின் வீரியம் உள்ள விந்தணுவை உட்கொண்டு கருவாகி கர்ப்பப்பை அதாவது யூட்ரஸை சென்றடைகிறது.
இன்றைய நாகரீக காலத்தில் சர்க்கரை நோயானது பாரபட்சமின்றி, எல்லா வயதினரையும் பாகுபாடு இன்றி எல்லா மனிதர்களையும் தாக்கும் ஒரு இனிப்பான நோயாகும் . அந்தக் காலகட்டத்தில் இந்த நோய் பணக்காரர்களை மட்டுமே தாக்கியதாக கூறப்பட்டு வந்தது. காரணம் உடல் உழைப்பின்றி, ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்பவர்களையும், அதிக மன அழுத்தத்தில் உள்ளவர்களையும் அதிகம் பாதித்துள்ளது. மேலும் இதை ஒரு பரம்பரை வியாதி என்றும் அழைக்கப்படுகிறது. காரணம் ஒருவரது பெற்றோருக்கு இந்த நோயானது இருந்தால் அவர் பெற்ற பிள்ளைகளுக்கும் இந்த நோய் வருவதற்கு அதிக வாய்புள்ளது ஆனால் இந்த காலகட்டத்தில், பிறக்கும் குழந்தைக்கு கூட சர்க்கரை நோய் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
சொரியாஸிஸ் எனும் தடிப்பு தோல் அலர்ஜியானது தோலில் ஏற்படும் தொற்றுத்தன்மை இல்லாத தன்னுடல் தாக்கம் நோயாகும். இந்த நோய் தோல் மற்றும் மூட்டுகளை பாதிக்கும். இது பொதுவாக தோலில் சிவந்த செதில் போன்ற திட்டுக்களை ஏற்படுத்தி, தோல்களில் வெள்ளி அதாவது சில்வர் நிறத் தோற்றத்தை அல்லது வெள்ளை நிறத் தோற்றத்தில், மீன் செதில்கள் போல் ஏற்பட்டு, நாட்பட வடிவத்தில் பெரிதாகி, உடம்பில் ஒரு அருவருப்பான தோற்றத்தை உருவாக்குவதுடன், சீழ் வடியும் புண்ணாகவும் மாறுகிறது. இந்த நோய் உச்சத்தலை முதல் இனப்பெருக்க உறுப்புகள் உள்பட, உள்ளங்கால் வரையிலும் எந்த பகுதியை வேண்டுமானாலும் பாதிக்கலாம்.
உடம்பில் உறுதியானதும், கடினம் ஆனதும் எலும்பு ஒன்றுதான். இது கால்சியம் பாஸ்ஃபேட்டினாலும், கால்சியம் கார்ப்பரேட்டினாலும் ஆனது. நமது உடம்பில் மொத்தம் 206 வகை எலும்புகள் வளர்ச்சி அடைகின்றன. இந்த எலும்புகள் தேவைக்கு தக்கவாறு ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படுகின்றன. மூட்டுகள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது: ◈ அசையும் மூட்டுகள் ◈ அசையா மூட்டுகள்
இன்றைய நவீன யுகத்தில் ஏராளமான குழந்தைகளை அச்சுறுத்தும் நோய் ஆட்டிசம். இதனை நோய் என்பதை விட குறைபாடு என்பது பொருத்தமாக இருக்கும். ஆட்டிசம் என்பது மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு தங்களை சுற்றியுள்ளவற்றில் இருந்து விலகி தங்களுக்கென்று ஒரு தனி உலகை உருவாக்கிக் கொள்வது. இந்த நோய் பெரும்பாலும் ஆண் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. ஆட்டிசம் பாதித்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று ஒரு வரையறை கிடையாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செயல்படுவர்
தகாத நட்பால், பொழுது போக்காக தொடங்கி நாளடைவில் குடிபோதைக்கு அடிமையாகி தன்னிலை மறந்து, தன் சுயமரியாதை இழந்து, இறுதியில் தன்னையே இழந்து, தன் குடும்பத்தை மறந்து, இனி வாழ்க்கையே இல்லை என பல மருத்துவர்களால் கைவிடப்பட்ட பலர், தனக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கு தக்கவாறு எமது 15 முதல் 45 நாட்கள் சிகிச்சையில் குடிபோதை மறந்து, இன்று குடும்பத்துடன் நலமுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்திய ஆயுர்வேதம் உலகிற்கு கணிசமான அளவு விஷயங்களை வழங்கியுள்ளது. இந்த விஷயங்கள் தனிநபர்களின் வாழ்க்கை முறையை மாற்றிவிட்டன, மேலும் அவர்கள் வியாதிகள் நிறைந்த உலகத்திலிருந்து முன்னேறி, உலகிற்கு முற்றிலும் பொருத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள். ஆயுர்வேதத்தின் முக்கியத்துவம் அளப்பரியது மற்றும் மாற்று மருத்துவ முறைகளில் இது முக்கிய நடைமுறை என்பதில் சந்தேகமில்லை.