முதற்கண் எமது நேயர்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள்.
முந்தைய காலகட்டத்தில் மருத்துவமனையாக செயல்பட்டு வந்த நமது மருத்துவமனை, பலவகைப்பட்ட பரிவர்த்தனையுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு புதிதாக ஆயுர்வேத மருத்துவ முறைப்படி பஞ்சகர்மா என்ற ஒருவகை மருத்துவத்தையும் முன்னெடுத்து செயல்பட்டு வருவாதால், " ஸ்ரீ சாய் ஹெர்பஸ் " எனும் புதிய பெயருடன் சென்னை-யில் செயல்பட்டு வருகிறது. கடந்த 27 வருடங்களாக உங்களின் பேராதரவோடு 100% சதவீதம் வெற்றி என்ற நோக்கோடு செயல்பட்டு வந்த நமது மருத்துவமனை, மீண்டும் உங்களின் மேலான ஆதரவோடு, எமது மருத்துவர்களின் சேவை மனப்பான்மையானது மீண்டும் தொடர, உங்களுடன் கைகோர்த்து வெற்றி நடை போட, உங்களின் பேராதரவை வேண்டுகின்றோம்.
எமது மருத்துவமனையின் சிகிச்சை முறை தாங்கள் அறிந்த ஒன்றே. எங்களால் ஒரு நோயை குணப்படுத்த முடியும் என்றிருந்தால் மட்டுமே அந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்கிறோமே தவிர யாரையும் ஏமாற்றுவது இல்லை. எனவே எமது மருத்துவ சேவையில் 100% சதவீதம் வெற்றியும் பெற்றுள்ளோம். எங்களை நம்பி வரும் நோயாளிகளை முறைப்படி பரிசோதனை செய்கிறோம், தேவைப்பட்டால் அறிவியல் ரீதியாகவும் பரிசோதனைகள் செய்து பார்த்து சிகிச்சை அளிக்கின்றோம். எங்களால் முடியாத நிலை இருக்கும் பட்சத்தில், எந்த நோயாளிகளையும் நாங்கள் அலைய வைப்பதில்லை. நாங்களும் கடவுள் இல்லையே. எனவே முடியாது என்று வரும் சில நோயாளிகளுக்கு அந்த நோயின் வீரியம் அதன் தன்மையை, அந்த நோயாளிடமோ இல்லை அவருடன் வந்திருக்கும் அவர்களை சார்ந்தவர்களிடமோ சொல்லி புரிய வைத்து , அவர்களுக்கு வந்திருக்கும் இந்த நோய்க்கு அடுத்த கட்ட தீர்வு என்ன என்பதையும் சொல்லி புரிய வைத்து அனுப்பி வைக்கின்றோம். இதனால்தான் 100% வெற்றியும் மக்கள் நன்மதிப்பையும் பெற்றிருக்கின்றோம்.
சில சமயங்களில் வெளிநாடு/ வெளி மாநிலங்களில் இருந்து வரும் நோயாளிகள் பலர் டாக்டர் உங்களை நம்பி வெகு தூரத்தில் இருந்து வந்திருகின்றோம், உங்களால் முடிந்த முயற்சியை செய்யுங்கள் என்றும் சொல்வதுண்டு. அப்பவும் மனதுக்குக்கு மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட நோயாளிகளுக்கும் இறைவன் மேல் பாரத்தை போட்டு விட்டு ஒரு 3 மாதங்கள் மட்டும் சிகிச்சை அளிக்கின்றோம். சிகிச்சையில் முன்னேற்றம் இருந்தால் சிகிச்சையை தொடர்கிறோம். அதிலும் நிறைய வெற்றிகளை இறைவன் எங்களுக்கு அளித்திருக்கின்றார்.
எங்களது சிகிச்சை முறையில் நோயாளியின் நோயை மூன்றாகப் பிரித்துக் கொள்கின்றோம். ஆரம்ப நிலை, இடைப்பட்ட நிலை, முதிர்ந்த நிலை என மூன்று கட்டகளாக பிரித்து, பாதிப்புக்கு தக்கவாறு சிகிச்சை அளித்து வருகின்றோம். அதில் 48 நாட்களில் குணமடைந்தவர்களும் உண்டு, 3 மாதங்களில் குணமடைந்தவர்களும் உண்டு. மூலிகை மருத்துவத்தை பொருத்தவரையில் ஒரு நோயாளி குறைந்த பட்சம் ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள், அந்த நோயாளி நிச்சயம் சிகிச்சை பெற வேண்டியது வரும். அப்படி சிகிச்சை பெற்றால் தான் திரும்பவும் அந்த குறிப்பிட்ட நோய்க்காக சிகிச்சை பெற வேண்டிய அவசியம் நிச்சயம் வராது.
இப்ப வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருந்து எண்ணற்ற நோயாளிகள் அல்லது அவர்களை சார்ந்தவர்கள் எங்களை தொடர்பு கொள்கின்றனர். அவர்களை நாங்கள் உடனே இங்கு வரவழைப்பதில்லை. நோயாளியின் நோயின் தன்மை , அதன் வீரியம் எந்த அளவில் உள்ளது என்பதை போனிலோ அல்லது வீடியோ call-ன் மூலமோ தெரிந்த பின்னர், அவர் ஏற்கனவே எடுத்த பரிசோதனை Reports -களை WhatsApp மூலம் அல்லது E mail முலமாக பெற்று தெளிவு பெற்றபின் தேவைப்பட்டால் புதிதாக எடுக்க வேண்டிய பரிசோதனைகளையும் அங்கேயே அவர்களை எடுக்க வைத்து, அதையும் WhatsApp மூலம் அல்லது E mail மூலம் பெற்று தெளிவு பெற்ற பின் அந்த நோயாளியின் நோயை எமது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியும், இந்த நோயாளியை குணப்படுத்த முடியும் என்றிருந்தால் மட்டும் ஒரிரு மாத மருந்துகள் கூறியர் மூலம் அவர்களுக்கு மருந்துகளை அனுப்பி வைத்து , மருந்துகளை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதையும் தெளிவாக எடுத்து சொல்லி, சிறிது முன்னேற்றம் ஏற்பட்ட பின்னர் மறுபடியும் தேவைப்பட்டால் பரிசோதனைகள் செய்து பார்த்து, குறைபாடுகள் இருந்தால் மருத்துவ சிகிச்சையை தொடர்கின்றோம்.
எங்களது மருத்துவ முறையில் எந்த ஒரு அறுவை சிகிச்சையோ, இரத்த சேதாரமும் இல்லை. மூலிகை மருந்தாலேயே குணப்படுத்துகின்றோம். நோயிலிருந்து நிரந்தர தீர்வும் அளிக்கின்றோம்.
இன்று எண்ணற்ற ஆங்கில மருத்துவர்கள் கூட எமது மூலிகை மருத்துவத்தையே பரிந்துரை செய்கின்றனர். உதாரணமாக M2TONE, SPERMON, SEMENTO, ADYZOVA, NEO,CONFIDO, TESTOVITE ,ALOES COMPOUND , LAPTADIN போன்ற எண்ணற்ற எமது மூலிகை மருந்துகளையே பரிந்துரை செய்கின்றனர்.
எந்த நோயாக இருந்தாலும் எமது மூலிகை மருத்துவத்தை பொறுத்தவரையில் பத்தியங்கள் நிச்சயம் உண்டு, பக்க விளைவுகள் நிச்சயம் கிடையாது. அதுவும் தாங்கள் தேர்வு செய்யும் மருத்துவரை பொறுத்தது. பத்தியங்கள் நோய்க்கு தகுந்தவாறு மாறுபடும்.
இப்ப நிறைய பேர் என்ன பண்றீங்கன்னா? பெரிய பெரிய Bulding -அ பாக்குறீங்க, கவர்ச்சியான விளம்பரங்களை பார்குறீங்க, போய் சிகிச்சை என்ற பெயரில் பல லட்சங்களை இழக்குறீங்க. அதுவும் சிகிச்சை பலனின்றி கண்ணீரோடு வந்து நிற்கிறீங்க.
நான் என்ன சொல்ல வரேன்னா? நீங்க ஒரு டாக்டர பார்க்க போறீங்க, உடனேயே மருந்து எடுக்க வேண்டும் என்பது அவசியம் கிடையாது. (Emergency medicine நீங்கலாக ) நீங்க பார்க்க போகும் மருத்துவரிடம், உங்களுக்கு வந்திருக்கும் நோய் குறித்து உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை கேட்டு தெளிவான விளக்கம் அவரிடமிருந்து கேட்டு தெரிந்து, அவரின் பதில் தங்களுக்கு திருப்திகரமாக இருந்தால் மட்டும் மருந்துகளை எடுங்க.
ஒரு நோயாளியின் Health எப்படி உள்ளது? நாம் கொடுக்கும் மருந்துகளை அவர் சாப்பிட்டால் அவருக்கு ஒத்துக்கொள்ளுமா? இவருக்கு இந்த பாதிப்பு எப்படி வந்திருக்கும்? இவரின் இந்த நோயின் தற்போதைய நிலை என்ன என்று விரிவாக தெரிந்து கொள்ளும் வரையில் எந்த ஒரு மூலிகை மருத்துவராலும் ஒரு நோயாளிக்கு மருந்துகள் கொடுக்க இயலாது.
இப்ப சில வைத்தியர்கள் ஏற்கனவே ரெடிமேடாக பல பிரிவுகளில், பல குறிப்பிட்ட தொகைகளுடன், நோயாளிகளை பார்க்காமலேயே சிகிச்சை அளிப்பதாக கூறி, பல போலி விளம்பரங்களை செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட போலி விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம்.
தாங்கள் தேர்ந்தெடுக்கும் மருத்துவர் தங்களுக்கு வத்திருக்கும் நோயை குணப்படுத்தும் அளவுக்கு திறமை வாய்ந்தவரா? என தெரிந்து, தெளிவு பெற்ற பின்னர் சிகிச்சை மேற்கொள்ளவும்.
*முன்பதிவு பெற்று வரவும்*.