English Hindi Profile
Herbal Icon

நோயாளிகளின் கவனத்திற்கு!!!

​​நோயாளிகளின் நோயின் தன்மைகளை, பரிசோதனைகள் மூலம் பரிசோதித்து கண்டறிந்த பின் தான் சிகிச்சை அளிக்க முடியுமே, தவிர சில விளம்பரங்களில் வருவது போல் A-பிரிவு இவ்வளவு. B-பிரிவு இவ்வளவு, special,super special என்று குறிப்பிட்டு ஒரு தொகையை நிர்ணயித்து சிகிச்சை அளிப்பது என்பது எந்த ஒரு மருத்துவத்திலும் கிடையாது. ​​மற்றும் ஒரு மாத மருந்து வாங்கினால் ஒரு மாத மருந்து இலவசம் என்பதும் மருத்துவத்தை பொருத்தவரையில் நகைப்புக்குரியது. இப்படிப்பட்ட போலியான விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம். ​​நோயாளியின் நோயின் தன்மை, மற்றும் நோயின் வீரியத்திற்கு தக்கவாறு, மருத்துவ சிகிச்சைகள் மாறுபடும் . தேவைப்பட்டால் அறிவியல் ரீதியாகவும் பரிசோதனைகள் செய்யப்பட்டு தான் சிகிச்சை அளிக்க முடியுமே தவிர, சில போலியான விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம்.

Herbal Icon

ஸ்ரீ சாய் ஹெர்ப்ஸ் சாதனை

எமது மருத்துவமனையானது உலகிலேயே முதன்முதலில் மூலிகை மருத்துவ சிகிச்சைக்காக, உலகின் நம்பர்-1 தரச் சான்றிதழான "ISO 9001-2008"தரச் சான்று பெற்ற முதல் மருத்துவமனை என்ற பெருமை கூறியது. மேலும் எமது சிகிச்சையை பாராட்டி, "மருத்துவர் களஞ்சியம்" என்ற"டாக்டர் கலைஞர் விருதும்" ,"பாவேந்தர் பாரதிதாசன் விருதும்", மற்றும் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கமும், அனைத்திந்திய மாற்று முறை மருத்துவ அகாடமியும்," இணைந்து 8வது மாநில மாநாட்டில்"சாதனையாளர் விருதும்"வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Herbal Icon

வெளிநாடு / வெளிமாநில நோயாளிகள்

நோயின் முழு விவரங்களையும் கடிதம், தொலைபேசி அல்லது Email மூலம் தெரிவித்து மருந்து கட்டணத்தை MURUGAESH, (A/C NO: 18850100007088), BANK OF BARODA, K K NAGAR, CHENNAI-78, IFSC CODE: BARB0KKNGA ,( FIFTH CHARACTER IS ZERO), என்ற பெயரில் அனுப்பி மருந்தையும்,மருந்தைப் பயன்படுத்தும் முறையையும் கூறியர் மூலம் பெறலாம்

Herbal Icon

ஸ்ரீ சாய் ஹெர்ப்ஸ் வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம்கள்

பாண்டிச்சேரி, கடலூர், கும்பகோணம், திருச்சி, மதுரை, நாகர் கோவில், கன்னியாகுமரி, கரூர், கோவை, சேலம், ஓசூர், வேலூர், போன்ற உள் மாவட்டங்களிலும் மேலும், பெங்களூரு, மும்பை, டெல்லி, கல்கத்தா, போன்ற வெளிமாநிலங்களுக்கும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஜெர்மன், போன்ற வெளி நாடுகளுக்கும் விஜயம் செய்கின்றனர். டாக்டரை சந்திக்க முன்பதிவு அவசியம்.


எங்கள் சேவைகள்

Herbal Icon

ஆஸ்துமா

ஆஸ்துமா-இது பாரபட்சம் இன்றி எல்லோரையும் பாதிக்கக்கூடிய ஒரு நோய். இது ஆண், பெண், குழந்தைகள் என்ற எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் எந்த காலத்திலும், எந்த நேரத்திலும், எந்த வயதிலும் எல்லோரையும் பாதிக்கக் கூடியது. ஆனாலும் இதன் பாதிப்பு பெரும்பாலும் குளிர்காலங்களில் இதன் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே காணப்படும். உலகின் 25 பேரில் ஒருவர் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுகின்றனர்.

Herbal Icon

ஆண்மை குறைவு

இப்ப நிறைய விளம்பரங்கள பார்க்குறோம். ஆண்மை குறைவா? எங்கிட்ட வாங்க 7 நாட்களில் குணம், மருந்தை சாப்பிட உடன் குணம் என்றும் , இன்னும் சில மருத்துவர்கள், அவங்க கொடுக்கவிருக்கும் மருந்துகளை, நோயாளி களை பார்க்காமலேயே, மருந்துகளில் பல பிரிவுகளை உருவாக்கி A பிரிவு, Bபிரிவு,C பிரிவு என்றும், மேலும் Special, super special. என்றும் வகைபடுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Herbal Icon

குழந்தையல்லா தம்பதிகள்

குழந்தையின்மைக்கான காரணங்களில் முக்கிய பங்கு வகிப்பது ஆண் மலட்டுத்தன்மை மற்றும் ,பெண் மலட்டுத்தன்மை ஆகும். சராசரியான ஒரு ஆண் ஒரு பெண்ணைத் தாய்மையடையச் செய்ய அவனது உயிர் நாடியில் இருந்து வெளிப்படும் விந்துக்களின் 1 மில்லி லிட்டரை எடுத்து பரிசோதித்து பார்க்கும் போது உயிரணுக்களின் எண்ணிக்க குறைந்த பட்சம் 60 மில்லியனுக்கும் மேலான எண்ணிக்கையுடனும், அதன் அசையும் தன்மை 75% சதவீதத்திற்கும் மேலாகவும், அதன் சேப் மார்பாலஜீ ( வடிவமைப்பு ) நார்மலாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

Herbal Icon

மாதவிடாய் கோளாறு

(குழந்தையல்லாமை)

மாதவிடாய் கோளாறுகள் 28 நாட்களைக் கொண்ட ஒரு பெண்ணின் மாதவிலக்கு சுழற்சியானது, 5 காலகட்டங்களாக விரிக்கப்படுகின்றது: 1. 1வது நாள் மாதவிடாய் ஆனது தொடங்கி 4வது நாள் வரை ஒரு பெண்ணின் மாதவிலக்கின் ரத்தப்போக்கு காலங்களாகும். 2. அடுத்த 5வது நாள் முதல் 12வது நாட்கள் வரை ப்பாலிகுலோர் ஃபேஸ் (Follicular) அதாவது கருவாணுவானது வளரும் காலமாகவும். 3. அடுத்து 13வது நாள் முதல் 14வது நாள் வரை ஓவலேஸன் அதாவது கருவாணுவானது வெளியேறும் காலமாகவும். 4. அடுத்து 15வது நாள் முதல் 26வது நாள் வரை கருவாணுவானது வெளிப்பட்ட பின் வளர்ச்சி அடையும் காலமாகவும்.

Herbal Icon

கருப்பை வளர்ச்சி இல்லாமை

(குழந்தையல்லாமை)

கருப்பை அதாவது யூட்ரஸ் என்பது அடிவயிற்றில் சதையில்லான ஓர் உறுப்பு. இதன் வழியாகத்தான் ஒரு ஆணின் உயிரணு கருப்பை வெளிக் குழல், கருக்குழாய் அதாவது ஃபெலோப்பியன் ட்யூப் என்கிற 12 சென்டிமீட்டர் நீளமுள்ள இரு குழல்களில் ஒன்றிற்குள் செல்கிறது கருப்பையின் மேற்புறம் உள்ள இரு குழல்களில் ஒன்றிற்குள் செல்கிறது. கருப்பையின் மேல்புறம் உள்ள இரு சினைப்பைகளில் (ஓவரீஸ்) ஒவ்வொரு கருப்பை வெளிக்குழலிலும் முடிவடைகின்றன. ஒவ்வொரு சினைப்பையும் வெண்மை நிறத்துடன், பாதாம் பருப்பு வடிவத்தில் சுமார் 3 செ.மீ, நீளத்திற்கு இரண்டும் சேர்ந்த சுமார் 7 கிராம் எடையும் காணப்படும்.

Herbal Icon

கருப்பை கட்டிகள்

(குழந்தையல்லாமை)

இது கர்ப்பப்பையில் ஏற்படும் ஒருவித கட்டியாகும். இது கர்ப்பப்பையின் உள்பகுதியிலோ அல்லது கர்ப்பப்பையின் வெளிப்பகுதியிலோ அல்லது இரண்டு பகுதியிலும் காணப்படும் ஃபைப்ராய்ட் (Fibroid) எனப்படும் ஒருவகை கட்டியாகும். இந்த நோய் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன், ப்ரோ கெஸ்டி ரோட்டின் மற்றும் ப்ரோ கெஸ்டின் என்ற ஹார்மோன்களின் தூண்டுதலால் கருப்பை தசையில் (எண்டோமெட்டிரியம்) உண்டாகக் கூடிய அரியவகை புற்றுநோய் அல்லாத கட்டியாகும். குழந்தையின்மைக்கு இதுவும் ஒரு காரணமாக அமையலாம்.

Herbal Icon

பாலிசிஸ்டிக் ஓவாரி சிண்ட்ரோம் (PCOS)

(குழந்தையல்லாமை)

பிஸிஓஎஸ் எனப்படும் பாலிசிடிக் ஓவரி சிண்ரோம் என்னும் பிரச்சனை என்று 60% பெண்களை தாய்மை அடைய செய்ய தடையாக இருக்கிறது. பிஸிஓஎஸ் பாதிப்பு உள்ள பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு ஏற்பட வேண்டும் என்பதற்கு இல்லை. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களால் 30% பேருக்கு மட்டுமே மாதவிலக்கு கோளாறு ஏற்படுகிறது.

Herbal Icon

கருக்குழாய் அடைப்பு

(குழந்தையல்லாமை)

ஒரு பெண்ணானவள் தாய்மையடைவதில் முக்கிய பங்கு வகிப்பது ஃபெலோப்பியன் ஃட்யூப் எனப்படும் கருக்குழாய் ஆகும். இதில் சினைப்பையில் இரு பக்கங்களில் இருந்தும் இடது, வலது என 4 அங்குல நீளத்துடன் இரு குழாய்களாக கருப்பையை இணைக்கிறது. இவ்விரு கருக்குழாய்கள் மூலம் தான் சினைப்பையில் இருந்து வெளிப்படும் முயற்சியுற்ற கரு முட்டை ஆனது ஒரு ஆணின் வீரியம் உள்ள விந்தணுவை உட்கொண்டு கருவாகி கர்ப்பப்பை அதாவது யூட்ரஸை சென்றடைகிறது.

Herbal Icon

சர்க்கரைநோய்

​இன்றைய நாகரீக காலத்தில் சர்க்கரை நோயானது பாரபட்சமின்றி, எல்லா வயதினரையும் பாகுபாடு இன்றி எல்லா மனிதர்களையும் தாக்கும் ஒரு இனிப்பான நோயாகும் . அந்தக் காலகட்டத்தில் இந்த நோய் பணக்காரர்களை மட்டுமே தாக்கியதாக கூறப்பட்டு வந்தது. காரணம் உடல் உழைப்பின்றி, ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்பவர்களையும், அதிக மன அழுத்தத்தில் உள்ளவர்களையும் அதிகம் பாதித்துள்ளது. மேலும் இதை ஒரு பரம்பரை வியாதி என்றும் அழைக்கப்படுகிறது. காரணம் ஒருவரது பெற்றோருக்கு இந்த நோயானது இருந்தால் அவர் பெற்ற பிள்ளைகளுக்கும் இந்த நோய் வருவதற்கு அதிக வாய்புள்ளது ஆனால் இந்த காலகட்டத்தில், பிறக்கும் குழந்தைக்கு கூட சர்க்கரை நோய் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

Herbal Icon

சொரியாசிஸ்

சொரியாஸிஸ் எனும் தடிப்பு தோல் அலர்ஜியானது தோலில் ஏற்படும் தொற்றுத்தன்மை இல்லாத தன்னுடல் தாக்கம் நோயாகும். இந்த நோய் தோல் மற்றும் மூட்டுகளை பாதிக்கும். இது பொதுவாக தோலில் சிவந்த செதில் போன்ற திட்டுக்களை ஏற்படுத்தி, தோல்களில் வெள்ளி அதாவது சில்வர் நிறத் தோற்றத்தை அல்லது வெள்ளை நிறத் தோற்றத்தில், மீன் செதில்கள் போல் ஏற்பட்டு, நாட்பட வடிவத்தில் பெரிதாகி, உடம்பில் ஒரு அருவருப்பான தோற்றத்தை உருவாக்குவதுடன், சீழ் வடியும் புண்ணாகவும் மாறுகிறது. இந்த நோய் உச்சத்தலை முதல் இனப்பெருக்க உறுப்புகள் உள்பட, உள்ளங்கால் வரையிலும் எந்த பகுதியை வேண்டுமானாலும் பாதிக்கலாம்.

Herbal Icon

மூட்டுவலி

உடம்பில் உறுதியானதும், கடினம் ஆனதும் எலும்பு ஒன்றுதான். இது கால்சியம் பாஸ்ஃபேட்டினாலும், கால்சியம் கார்ப்பரேட்டினாலும் ஆனது. நமது உடம்பில் மொத்தம் 206 வகை எலும்புகள் வளர்ச்சி அடைகின்றன. இந்த எலும்புகள் தேவைக்கு தக்கவாறு ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படுகின்றன. மூட்டுகள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது: ◈ அசையும் மூட்டுகள் ◈ அசையா மூட்டுகள்

Herbal Icon

மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் (ஆட்டிசம்)

இன்றைய நவீன யுகத்தில் ஏராளமான குழந்தைகளை அச்சுறுத்தும் நோய் ஆட்டிசம். இதனை நோய் என்பதை விட குறைபாடு என்பது பொருத்தமாக இருக்கும். ஆட்டிசம் என்பது மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு தங்களை சுற்றியுள்ளவற்றில் இருந்து விலகி தங்களுக்கென்று ஒரு தனி உலகை உருவாக்கிக் கொள்வது. இந்த நோய் பெரும்பாலும் ஆண் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. ஆட்டிசம் பாதித்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று ஒரு வரையறை கிடையாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செயல்படுவர்

Herbal Icon

குடி போதைக்கு அடிமைகள்

தகாத நட்பால், பொழுது போக்காக தொடங்கி நாளடைவில் குடிபோதைக்கு அடிமையாகி தன்னிலை மறந்து, தன் சுயமரியாதை இழந்து, இறுதியில் தன்னையே இழந்து, தன் குடும்பத்தை மறந்து, இனி வாழ்க்கையே இல்லை என பல மருத்துவர்களால் கைவிடப்பட்ட பலர், தனக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கு தக்கவாறு எமது 15 முதல் 45 நாட்கள் சிகிச்சையில் குடிபோதை மறந்து, இன்று குடும்பத்துடன் நலமுடன் வாழ்ந்து வருகின்றனர்.

Herbal Icon

பஞ்சகர்மா

இந்திய ஆயுர்வேதம் உலகிற்கு கணிசமான அளவு விஷயங்களை வழங்கியுள்ளது. இந்த விஷயங்கள் தனிநபர்களின் வாழ்க்கை முறையை மாற்றிவிட்டன, மேலும் அவர்கள் வியாதிகள் நிறைந்த உலகத்திலிருந்து முன்னேறி, உலகிற்கு முற்றிலும் பொருத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள். ஆயுர்வேதத்தின் முக்கியத்துவம் அளப்பரியது மற்றும் மாற்று மருத்துவ முறைகளில் இது முக்கிய நடைமுறை என்பதில் சந்தேகமில்லை.

  • உங்கள் உடல் மற்றும் மனதை மறுசீரமைக்க
  • சுத்திகரித்து புத்துயிர் பெறுங்கள்
பஞ்சகர்மா

பஞ்சகர்மா சிகிச்சையை ஏன் மேற்கொள்ள வேண்டும்?

மன அழுத்தம், இயற்கை மாசுபாடுகள் மற்றும் மோசமான வாழ்க்கை முறை முடிவுகள் ஆகியவை உடலில் ஒரு கொடிய சுமையை ஏற்படுத்துகின்றன - திசுக்கள் மற்றும் சுழற்சி அமைப்பில் இருந்தால் மோசமான ஆரோக்கியம் ஏற்படுகிறது. பஞ்சகர்மா இந்த சீரழிவு செயல்முறையை விரைவாக மாற்றுகிறது மற்றும் அதன் தாக்கம் மிகவும் குறிப்பிடத்தக்கது மற்றும் நீண்ட காலம் நீடிக்கும். பஞ்சகர்மா மசாஜ், வீட்டில் வளர்க்கப்படும் சானாக்கள், சிறப்பு உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து வழிமுறைகள், மெல்லிய உண்ணாவிரதம் மற்றும் பெருங்குடல் சிகிச்சைகள் ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்துகிறது. உங்கள் சொந்த பஞ்சகர்மா திட்டம் ஒரு ஆயுர்வேத மருத்துவரின் தீவிர பரிசோதனையுடன் தொடங்குகிறது, இது ஒரு தனிநபரின் நல்வாழ்வுக்கு ஏற்ப சிகிச்சையை பரிந்துரைக்க வல்லுநருக்கு அதிகாரம் அளிக்கிறது. உங்கள் பஞ்சகர்மா மருந்துகள் முன்னேறும்போது, ​​வீட்டில் பயன்படுத்த குறிப்பிட்ட மருத்துவ தாவரங்கள் மற்றும் அடிப்படை எண்ணெய்கள் கலந்த சிறப்பு ஆயுர்வேத உணவு முறை உங்களுக்கு வழங்கப்படும். இவை உங்கள் கல்லீரல் மற்றும் வயிறு தொடர்பான உறுப்புகளை உயிர்ப்பிக்கவும், நச்சுகளை சுத்தப்படுத்தவும் உதவும்

  • மன அழுத்தத்தை குறைப்பு: சிகிச்சை மூலம் உங்கள் மனதை மற்றும் நரம்பு மண்டலத்தை தளர்த்தவும் மன அழுத்தத்தை குறைக்கவும் செய்யலாம்
  • நோய் எதிர்ப்புத்தன்மை மேம்பட: உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், நோய்களுக்கு எதிராக உங்களை சக்திவாய்ந்தவராக ஆக்கவும்
  • செரிமான அமைப்பை மேம்பாடு: உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், சிறந்த சத்து உறிஞ்சுதலுக்கும், அதிகப்படியான ஆற்றலுக்கும் உதவுகிறது
  • ஆழமான சுத்திகரிப்பு: உங்கள் உடலின் நச்சுகளை அகற்றவும், பாரம்பரிய சுத்திகரிப்பு முறைகள் மூலம்
மேலும் அறிய
சுத்திகரித்து புத்துயிர் பெறுங்கள்

பஞ்சகர்மா சிகிச்சை என்றால் என்ன?

இந்திய ஆயுர்வேதம் உலகிற்கு கணிசமான அளவு விஷயங்களை வழங்கியுள்ளது. இந்த விஷயங்கள் தனிநபர்களின் வாழ்க்கை முறையை மாற்றிவிட்டன, மேலும் அவர்கள் வியாதிகள் நிறைந்த உலகத்திலிருந்து முன்னேறி, உலகிற்கு முற்றிலும் பொருத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள். ஆயுர்வேதத்தின் முக்கியத்துவம் அளப்பரியது மற்றும் மாற்று மருத்துவ முறைகளில் இது முக்கிய நடைமுறை என்பதில் சந்தேகமில்லை. ஆயுர்வேதத்தின் மிக முக்கியமான கிளை பஞ்சகர்மா ஆகும். பஞ்சகர்மா என்ற பெயர் "ஐந்து செயல்கள்" என்று பொருள்படும், இந்த நுட்பம் உடலைக் கட்டுப்படுத்தும் ஐந்து தனித்துவமான அடிப்படை செயல்பாடுகளான வாந்தி, சுத்திகரிப்பு, நிருஹம், அனுவாசன் மற்றும் நாசியம் ஆகியவற்றின் அடிப்படையில் மிகவும் பொருத்தமானது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பஞ்சகர்மா குணப்படுத்தும் நுட்பம் என்பது ஆயுர்வேத நுட்பங்களில் பெரும்பாலானவை நிற்கும் ஒரு தூண் ஆகும்.

  • முழுமையான சுத்திகரிப்பு சிகிச்சை
  • முழுமையான உடல் புத்துயிர்ப்பு
  • ஆழமான திசு சுத்திகரிப்பு
  • புத்துயிர்ப்பூட்டும் பஞ்சகர்மா சிகிச்சைகள்
மேலும் அறிய
பஞ்சகர்மா

உங்கள் உடலை சுத்திகரித்து புத்துயிர் பெறுங்கள்

பஞ்சகர்மா என்பது ஆயுர்வேதத்தில் உள்ள ஒரு பாரம்பரிய சுத்திகரிப்பு மற்றும் புத்துணர்ச்சி சிகிச்சை ஆகும், இது உடலை சுத்தப்படுத்துவதற்கும் நச்சுத்தன்மையை நீக்குவதற்கும் தொடர்ச்சியான நடைமுறைகளை உள்ளடக்கியது. தனிநபரின் உடல்நிலை, உடல் வகை மற்றும் ஏற்றத்தாழ்வுகளைப் பொறுத்து குறிப்பிட்ட செயல்முறை மாறுபடலாம். ஆயுர்வேதத்தின் மிக முக்கியமான கிளை பஞ்சகர்மா ஆகும். பஞ்சகர்மா என்ற பெயர் "ஐந்து செயல்கள்" என்று பொருள்படும், இந்த நுட்பம் உடலைக் கட்டுப்படுத்தும் ஐந்து தனித்துவமான அடிப்படை செயல்பாடுகளை சார்ந்துள்ளது.

வாமன்

இந்த சிகிச்சையில், ஒரு நோயாளிக்கு சில நாட்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ஒல்லியேஷன் மற்றும் ஃபோமெண்டேஷன் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. நச்சுகள் உருகி உடலின் மேல் துவாரங்களில் குவிந்தவுடன், நோயாளிக்கு வாந்தியெடுத்தல் மருந்துகள் மற்றும் காபி தண்ணீர் கொடுக்கப்படுகிறது. இது வாந்தியை உண்டாக்குகிறது மற்றும் உடல் திசுக்களில் இருந்து விஷங்களை வெளியேற்ற உதவுகிறது. எடை அதிகரிப்பு, ஆஸ்துமா மற்றும் அதிக அமிலத்தன்மை போன்ற கபா-ஆதிக்கம் கொண்ட நிலைமைகளுக்கு வாமன் சிகிச்சை குறிப்பாக பரிந்துரைக்கப்படுகிறது.

விரேச்சன்

விரேசனில், குடல்களை சுத்தம் செய்வதன் மூலம் நச்சுகளை சுத்தப்படுத்துதல் அல்லது அகற்றுதல் நடக்கிறது. இந்த சிகிச்சையிலும், நோயாளிக்கு உள்ளேயும் வெளியேயும் ஒல்லியேசன் மற்றும் ஃபுமென்டேஷன் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அப்போதிருந்து, நோயாளிக்கு இயற்கையான சுத்திகரிப்பு அளிக்கப்படுகிறது, இது குடல்களை அகற்றுவதை ஊக்குவிக்கிறது, இது நச்சுகளின் உடலை சுத்தப்படுத்த உதவுகிறது. ஹெர்பெஸ் ஜோஸ்டர், மஞ்சள் காமாலை, பெருங்குடல் அழற்சி, செலியாக் தொற்று போன்ற பிட்டா-ஆதிக்கம் செலுத்தும் நிலைமைகளுக்கு விரேச்சன் சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

பஸ்தி

எனிமா மூலம் மருந்துப் பொருட்களை நிர்வகிப்பது, சிகிச்சை உலகில் ஆயுர்வேதத்தின் விதிவிலக்கான அர்ப்பணிப்பாகும். சிகிச்சையானது பெரிய நன்மைகளைக் கொண்டுள்ளது, குறிப்பாக சுருண்ட மற்றும் நாள்பட்ட நோய்களில். நோயின் தன்மைக்கு ஏற்ப, வீட்டில் வளர்க்கப்படும் கஷாயங்கள், எண்ணெய்கள், நெய் அல்லது பால் ஆகியவை மலக்குடலுக்குள் செலுத்தப்படுகின்றன, இது நம்பமுடியாத நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த சிகிச்சையானது மூட்டுவலி, பைல்ஸ் மற்றும் மலச்சிக்கல் போன்ற வாட்டா ஆதிக்கம் செலுத்தும் நிலைமைகளுக்கு எதிராக அதிக அளவில் சக்தி வாய்ந்தது.

நாஸ்யா

இந்த சிகிச்சையானது தலைப்பகுதியை சுத்தப்படுத்துவதற்கும் சுத்தப்படுத்துவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிகிச்சையின் ஆரம்பத்தில், தலை மற்றும் தோள்பட்டை பகுதிகளுக்கு ஒரு மென்மையான மசாஜ் மற்றும் தூண்டுதல் வழங்கப்படுகிறது. அதன் பிறகு, நாசி சொட்டுகள் இரண்டு நாசிகளிலும் கட்டுப்படுத்தப்படுகின்றன. இது முழு தலை பகுதியையும் சுத்தப்படுத்துகிறது மற்றும் பல்வேறு வகையான பெருமூளை வலி, தலைவலி, முடி பிரச்சினைகள், தூக்கக் கோளாறுகள், நரம்பியல் கோளாறுகள், சைனசிடிஸ், நாட்பட்ட நாசியழற்சி மற்றும் சுவாசக் கோளாறுகளைக் குறைக்கிறது.

ரக்தமோக்ஷன்

இந்த சிகிச்சையானது இரத்தத்தை சுத்தப்படுத்தவும், அசுத்த இரத்தத்தால் ஏற்படும் நோய்களுக்கு எதிராகவும் பயனுள்ளதாக இருக்கும். இது ஒரு குறிப்பிட்ட பகுதியில் அல்லது முழு உடலிலும் செய்யப்படலாம். தடிப்புத் தோல் அழற்சி, டெர்மடிடிஸ் போன்ற பல்வேறு தோல் நோய்த்தொற்றுகளில் இந்த சிகிச்சையானது குறிப்பாக மதிப்புமிக்கது, மேலும் புண்கள் மற்றும் நிறமி போன்ற உள்ளூர் புண்களில்.

பஞ்சகர்மா சிகிச்சையின் பலன்கள் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுதல், ஆற்றலைத் தடுப்பது, செரிமான அமைப்பை வலுப்படுத்துதல், திசுக்கள் மற்றும் செல்களை புத்துயிர் அளிப்பது மற்றும் மன அழுத்தத்தை குறைப்பதில் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

ஏன் எங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்

ஸ்ரீ சாய் ஹெர்ப்ஸ் கடந்த 27 ஆண்டுகளாக மூலிகை மருத்துவ சிகிச்சையில் நம்பகமான முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது. சித்தா, ஆயுர்வேதா இயற்கை மருத்துவ சிகிச்சைகள் மூலம் படித்த முன் அனுபவம் மிக்க மருத்துவர்களை கொண்டும் பாதுகாப்பான சிறந்த மூலிகை மருந்துகளை கொண்டும் நோயாளிகளின் நோயினை அடிப்படை காரணங்களை, தொட்டுணர்ந்தும், தேவைப்பட்டால் பரிசோதனைகள் மூலமும் கண்டறிந்து, நோயின் வீரியம், தன்மைக்கு தக்கவாறு சிறப்புமிக்க சிகிச்சை செய்து வருகின்றனர். எமது மருத்துவர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதுடன் தங்களை நம்பி வரும் நோயாளிகளை தங்களின் ஒருவராகவும், தன் குடும்பத்தில் ஒருவராகவும் பாவித்து சிகிச்சை அளிப்பதால் பொதுமக்களின் நான் மதிப்பையும், பலவகைப்பட்ட நன்மதிப்பு சான்றிதழ்களையும், சாதனையாளர்கள் என்ற விருதையும் பெற்றுள்ளோம். நோயாளிகளின் நலன் மட்டுமே குறிக்கோளாக செயல்பட்டு வருகிறோம். பாதுகாப்பான, பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சையை நாங்கள் உறுதி செய்கின்றோம். ஆண்மை குறைவு, குழந்தையின்மை, சர்க்கரை நோய், சொரியாசிஸ், மூட்டு வலி, ஆஸ்துமா, சைனஸ், ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகள், குடி போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் பலவகை பட்ட பால்வினை நோய்களுக்கும் சிறப்புமிக்க சிகிச்சை அளித்து வருகின்றோம். நோயாளிகள் எங்கள் மேல் கொண்டுள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்படுகின்றோம். நம்பிக்கையுடன் தங்களின் நம்பிக்கை வீண் போவதில்லை. நன்றி


பதிவுகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் முழுமையான அணுகுமுறையைப் பற்றிய பொதுவான கேள்விகளுக்கு விடைகள் காணவும் மற்றும் உங்கள் நலனின் பயனை ஆதரிக்க உங்களுக்கு எப்படி உதவ முடியும் என்பதை அறியவும்.

FAQ Image
முன் பதிவு செய்ய

நாங்கள் உங்களுக்காக இருக்கிறோம்